George / 2015 மார்ச் 21 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயம் சம்பியனாகியது.
அக்கரைப்பற்று அல்-பாயிஸா வித்தியாலயத்துக்கும் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்துக்கும் (தேசிய பாடசாலை) இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி, நேற்று வெள்ளிக்கிழமை (20) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 2-0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அட்டாளைச்சேனை மத்திய மகாவித்தியாலயம் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாமிடத்தை அக்கரைப்பற்று அல்-பாயிஸா வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.
அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி பொறுப்பாசிரியர்களான ஏ.எம்.அப்ராஜ் ரிலா,எம்.ஐ.எம்.அஸ்மி, ஏ.ஜீ.பிர்னாஸ், எம்.ஐ.சிமாலைன், பௌசுல் அமீன் ஆகியோரது பயிற்சியின் கீழ் அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .