2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சோபர் வெற்றி

George   / 2015 மார்ச் 23 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ், ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண விளையாட்டு துறை அமைச்சின் அனுசரனையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக  கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில்  அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கீட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்ற இறுதிப்போட்டியில்  சோபர் விளையாட்டுக் கழகமும் மீனோடைக்கட்டு கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட் ஸ்டார் அணி, 3.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 15 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சோபர் அணி, மூன்று விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 16 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.

இப்போட்டிகள் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .