George / 2015 மார்ச் 23 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சந்துன் கொடிதுவக்கு
இலங்கை விமானப்படை 16ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள சைக்கிளோட்ட போட்டி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன் இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த சைக்கிளோட்ட போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கையிலுள்ள 100ற்கும் அதிகமான சைக்கிளோட்ட சங்கங்களின் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
முதலாவது தினமாக ஏப்ரல் 2ஆம் திகதி கொழும்பிலிருந்து மாத்தளை வரையில் 158 கிலோமீற்றர் தூரம் போட்டி நடைபெறவுள்ளதுடன் இரண்டாவது நாள், தம்புள்ளையிலிருந்து புத்தளம் வரை 145 கிலோமீற்றர் தூரம் நடைபெறவுள்ளது.
மூன்றாவது நாள் (ஏப்ரல் 04) பாலவியிருந்து கொழும்பு வரை, 129 கிலோமீற்;றர் தூரத்துக்கு போட்டி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண், பெண் போட்டியாளர்களுக்கும் குழு முகாமையாளர்களுக்கும் போட்டி நடைபெறும் தினங்களில் நாளொன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் ஊக்குவிப்பு தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 minute ago
24 minute ago
51 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
51 minute ago
3 hours ago