2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நைட்றைடர் அணியினர் சம்பியன்

Kogilavani   / 2015 மார்ச் 24 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கிடையான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் நைட்றைடர் அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.

மட்டுப்படுத்தப்பட்ட பத்து ஓவர்களைக் கொண்ட மென்பந்துச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை(22) பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

14 கழகங்கள் கலந்துகொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு நைட்றைடர் அணியும் டுவிட்டர் அணியும் தகுதி பெற்றிருந்தன.

இறுதிப் போட்டிக்யில் முதலில் துடுப்பெடுத்தாட நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டுவிட்டர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 100 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நைட்றைடர் அணி 9.4 புள்ளிகளில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட இலக்கை அடைந்து சம்பியனாகினர்.

ஆட்ட நாயகனாக எம்.ஜே.எம்.றாஜூடீனும் சுற்றுப்போட்டியின் நாயகனாக டுவிட்டர் அணியின் எஸ்.எம்.அஜ்பரும் தெரிவாகினர்.

உடற்பயிற்சிப் பிரிவின் பணிப்பாளர் ஏ.எம்.றஸ்மி தலைமையில் நடைபெற்ற இப் போட்டி நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், உடற்கல்வி போதானசிரியர்கள், விரிவுரையாளர்கள், பீடாதிபதிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .