Kogilavani / 2015 மார்ச் 24 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அக்கரைப்பற்று பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான கால்பந்தாட்டப் போட்டியில் மயாஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மயாஸ் விளையாட்டுக் கழகத்துக்கும், ஹல்லாஜ் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை(22) பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 1-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மயாஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிக்கு பிரதான நடுவராக எம்.எச்.ஹம்மாத் கடமையாற்றினார். உதவி நடுவர்களாக எம்.எம்.அஸ்மி,ஏ.சி.நஸாத் ஆகியோர் செயற்பட்டனர்.
இப்போட்டிக்குரிய சகல ஏற்பாடுகளையும் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் மேற்கொண்டிருந்தார்.


3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026