Kogilavani / 2015 மார்ச் 25 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.தாஜகான்
அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான 7 பேர் மட்டுப்படுத்தப்பட்ட 5 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பொத்துவில் பிரதேச செயலகம் சம்பியனாகியது.
அம்பாறை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகங்களும் மாவட்ட செயலகமும் இப்போட்டியில் கலந்துகொண்டனர்.
இறுதிப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலக அணியும் மகாஓயா பிரதேச செயலகமும் மோதிகொண்டன.
இரண்டு அணிகளுக்குமான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) பானமை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பொத்துவில் பிரதேச செயலக அணியினர் 5 ஓவர் முடிவில் 100 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஓயா அணியினர் மொத்தமாக 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர்.
77 மேலதிக ஓட்டங்களால் பொத்துவில் பிரதேச செயலக அணியினர் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .