Thipaan / 2015 மார்ச் 25 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் பிரதேச செயலகத்தினால், மூதூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட கால்பந்தாட்ட போட்டியில், மூதூர் ஈராக் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்கிழமை இடம் பெற்ற இறுதிப்போட்டியில் மூதூர் எம்.சீ.சீ மற்றும் ஈராக் ஆகிய அணிகள் மோதின.
மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆட்டநேரம் முடியும்வரை இரு அணிகளும் கோல் எதுவும் போடாத நிலையில், இரு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன.
இதில், இவ்விரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்ததால் போட்டி மீண்டும் சமனிலையானது.
மீண்டும் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு பெனால்டி உதை வழங்கப்பட்டது. இதன் போது எம்.சீ.சீ அணியினரால் கோல் போடவில்லை.
ஈராக் அணி தமக்கு வழங்கப்பட்ட பெனால்டி உதையினை கோலாக மாற்றி வெற்றி பெற்றுக் கொண்டது.
இதன் போது சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட ஈராக் அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை பிரதம அதிதியாக கலந்து கொண்ட உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் வழங்கினார்.
இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட எம்.சீ.சீ அணிக்கான கிண்ணத்தை கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான தி.நாகேஸ்வரன், ஜே.எம்.லாஹீர், மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago