Thipaan / 2015 மார்ச் 25 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலக அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
அணிக்கு ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப் படுத்தப்பட்ட இச்சுற்போட்டியின் இறுதிப் போட்டிக்கு பொத்துவில் பிரதேச செயலக அணியும், மகாஓயா பிரதேச செயலக அணியும் தெரிவாகியிருந்தன.
பாணம பொது விளையாட்டு மைதானத்தில் 10 பிரதேச செயலக அணிகளுக்கிடையில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்று வந்த இச்சுற்றுப்; போட்டியின் இறுதிப் போட்டிக்கு, பொத்துவில் மற்றும் மகாஓய பிரதேச செயலக அணிகள் தெரிவாகின.
முதலில் துடுப்பெடுத்தாடிய பொத்துவில் பிரதேச செயலக அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 100 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஓயா பிரதேச செயலக அணி 23 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இதன் மூலம் 77 ஓட்டங்களினால் பொத்துவில் பிரதேச செயலக அணி வெற்றி பெற்று சம்பியனானது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முசாரத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.


16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
47 minute ago
3 hours ago