Princiya Dixci / 2015 மார்ச் 27 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2015ஆம் ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் முதற்கட்ட உதைப்பந்தாட்டப் போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.எம்.எம்.றசீன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடைக்கிடையே பெய்துவரும் மழை காரணமாக நாளை சனிக்கிழமை (28) நடைபெறவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இப்போட்டிகள் நடைபெறவிருந்த அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நீர்தேங்கி நிற்பதால் உதைபந்தாட்டப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெறவிருக்கும் கபடி சுற்றுப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாகவும் இதில் சகல கழகங்களும் கலந்து கொள்ளுமாறும் விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.எம்.எம்.றசீன் மேலும் தெரிவித்தார்.
11 minute ago
15 minute ago
42 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
42 minute ago
3 hours ago