Thipaan / 2015 மார்ச் 28 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரில், கால்பந்தாட்ட போட்டிகளில் தொடர் வெற்றிகளோடு சாதித்து வருகின்ற புத்தளம் கடற்கரை வீதி லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம், புத்தளம் த்ரீ ஸ்டார்ஸ் அணியை 02 கோல்களினால் வெற்றி கொண்டதன் மூலம் தனது சம்பியன் கனவை நோக்கி மேலும் நகர்ந்துள்ளது.
புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்டு வரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடருக்குரிய இவ் ஆட்டம், மாலை புத்தளம் சாகிறா தேசிய கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.
எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டியில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட குறுகிய காலத்துக்குள் மற்றுமொரு தொடரில் மீண்டும் சந்தித்துக்கொண்டமையால், இப்போட்டியை பார்க்க இரசிகர்கள் நிறைந்திருந்தனர்.
எதிர்பார்த்தது போலவே போட்டி விறுவிறுப்பாக அமைந்திருந்தது.
இடைவேளைக்கு முன்னதாக இரு அணிகளும் கோல் போட எத்தனித்தும் அது கைகூடாமல் போனது.
எனினும் இடைவேளைக்கு பின்னர் லிவர்பூல் அணியின் தலைவர் ஏ.எம்.அன்சார், முகாமையாளர் எம்.ஓ. ஜாகிர், பயிற்றுவிப்பாளர் .எச்.எச். நஜீப் ஆகியோர் புதிய வியூகம் அமைத்து வீரர்களின் நிலையில் இடமாற்றங்களை மேற்கொண்டதால் அவ்வணி மேற்கொண்ட அதிரடியான தாக்குதலில் தொடர்ந்து இரு கோல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.
லிவர்பூல் அணிக்காக எம்.எம். வியாஸ், ஏ.எம். நஸீம் ஆகியோர் கோல்களை பெற்றுக்கொடுத்தனர். போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.ஏ.எம். பஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்.
இந்த வெற்றியின் மூலமாக லிவர்பூல் அணி மொத்தமாக 07 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளது.
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago