2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்

Gavitha   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்டு வந்த பிரதேச கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டியில் 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனாக காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகஸ்தர் எம்.எம்.எம்.ஜலீல் தலைமையில் இந்த போட்டிகள் யாவும் நடைபெற்றன.

இப்போட்டியில் காத்தான்குடி பிரதேச எல்லைக்குட்பட்ட சுமார் 12 விளையாட்டுக் கழகங்கள் மேற்படி போட்டியில் பங்குபற்றி இருந்தன.

நேற்று (31) நடைபெற்ற இறுதிப் போட்டி காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தை  எதிர்த்;து காத்தான்குடி பதுரியா விளையாட்டுக்கழகம், காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.

இதில் போட்டியில் தண்டஉதை மூலம் காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகம்; வெற்றியீட்டி 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .