2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஐ.டி.எம். ஸ்டார் அணி சம்பியன்

Kogilavani   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

2015 ஐ.டி.எம். கிண்ணத்துக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் ஐ.டி.எம். ஸ்டார் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

அட்டாளைச்சேன அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை மைதானத்தில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியில் ஐ.டி.எம். நிறுவனத்தின் 6 அணிகள் பங்கு பற்றின.

அணிக்கு ஏழு பேர் கொண்ட ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியின் இறுதி போட்டியில் ஐ.டி.எம்.யங் பூமா அணியும் ஐ.டி.எம்.ஸ்டார் அணியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஐ.டி.எம்.யங் பூமா அணி 26 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐ.டி.எம்.ஸ்டார் அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது.

ஐ.டி.எம்.நிறுவனத்தின் அட்டாளைச்சேனை கிளையின் தலைவர் ஆர்.அர்சாத் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர் ஏ.சி.சைபுதீன், சுற்றாடல் பாதுகாப்பு அம்பாறைப் பிராந்திய பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் றஸாக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .