2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்'

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில்,  காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக்கழகம் 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்று முன்னாள் கிழக்கு மாகாகண சபை உறுப்பினரும் நீர்வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளருமான யூ.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விளையாட்டின் ஊடாக மட்டும் வெற்றி பெற முடியாது. வீரர்களின் நல்ல பழக்க வழக்கம், மார்க்க பற்று, நன்னடத்தை போன்ற பல்வேறு விடயங்கள் ஒரு விளையாட்டு வீரனிடம் காணப்பட வேண்டியது மிக முக்கிய பண்புகளாகும்.

காத்தான்னகுடி சன்றைஸ் விளையாட்டுக்கழகத்தின் ஆலோசகராக நான் பல ஆண்டுகள் இருந்தவன் என்றவகையில், காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டு கழக வீரர்களிடம் நல்ல பண்புகளை அதிகமாக காண்பதாகவும் யூ.எல்.எம்.என் முபீன் தெரிவித்தார்.

சென்ற காலங்களில் சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தில் பல சிறந்த வீரர்கள் விளையாடி உள்ளனர். அவர்களையும் நான் ஞாபகப்படுத்துவதுடன், இப்போது சன்றைஸ் விளையாட்டுக் கழகத்துக்காக விiளாடிவரும் இளம் வீரர்களையும் நான் பாராட்டுவதோடு, இளம் வீரர்கள் விளையாட்டின் ஊடாக முன்னேர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .