Thipaan / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை 5 ஆம் பிரிவு சனசமூக நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது.
இந்நிகழ்வு நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் அல் ஜெஸீறா பாடசாலையின் அதிபருமான எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கால்பந்தாட்ட சீருடைகள், கால்பந்து, காலணி போன்றவை வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் கழக ஆலோசகர்களான அதிபர் ஏ.எல்.யாசீன், எம்.ஐ.ஹாசீம் மற்றும் கழக உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


36 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
3 hours ago