2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சென்.ஜோன்ஸ்

Thipaan   / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் 19 வயது பிரிவு – 3 அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் பாதுக்க ஸ்ரீ பிரியரத்ன மகா வித்தியாலய அணியும் மோதவுள்ளன.

இந்த இறுதிப்போட்டி ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (08) இடம்பெறவுள்ளது.

பிரிவு – 3 அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்;டிகளில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றிகளைக் குவித்தது. 

இதனடிப்படையில், பிரிவு – 3 இறுதிப்போட்டியில் விளையாடும் யாழ்ப்பாணத்தின் முதல் அணியாக சென். ஜோன்ஸ் கல்லூரி அணி காணப்படுகிறது.

பிரிவு – 3 போட்டிகளில் இறுதிப்போட்டி வரையில் நுழைந்தமையால் சென். ஜோன்ஸ் அணி, இனிவருங்காலங்களில் பிரிவு –2 அணியாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. 

சென்.ஜோன்ஸ் கல்லூரியின் 13 வயதுப்பிரிவு பிரிவு – 2 அணியாகவும், 17 வயதுப்பிரிவு அணி பிரிவு – 1 அணியாகவும் ஏற்கெனவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .