2025 ஜூலை 07, திங்கட்கிழமை

களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட  களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி வித்தியாலய மைதானத்தில் செவ்வாய்கிழமை (07) மாலை நடைபெற்றது.  

வித்தியாலய அதிபர் கு.சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,  பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கல்குடா வலயக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஏறாவூர்ப்பற்று 02 கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சிவகுரு மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாணவர்களின் அணி நடை பவனியுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு மைதான நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் நிகழ்ச்சிகள், பெற்றோர் நிகழ்ச்சிகள், உத்தியோகஸ்தர்களுக்கான நிகழ்ச்சி உட்பட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. 

வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இல்லங்கள் ஆகியோருக்கு அதிதிகளினால் பரிசில்கள் மற்றும் கேடயம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .