2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஸ்ரீ பிரியரத்தின மத்திய கல்லூரி வெற்றி

Kogilavani   / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம், 19 வயது பிரிவினருக்கிடையில்  நடத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஸ்ரீ பிரியரத்ன மத்திய கல்லூரி அணி 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இச்சுற்றுப்போட்டி, 3 அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

இறுதிபோட்டியில், யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியும் பாதுக்க, ஸ்ரீ பிரியரத்தின மத்திய கல்லூரியும் மோதிகொண்டன.

கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் புதன்கிழமை (08) நடைபெற்ற இறுதிப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஸ்ரீ பிரியரத்தின மத்திய கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

அதற்கிணங்கக் களமிறங்கிய யாழ்;ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி, 44.3 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. இவ்வணி சார்பாக, எம்.சிந்துர்ஜன் 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஸ்ரீ பிரியரத்தின மத்திய கல்லூரி அணி சார்பாக எம்.விஜயசூரிய 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் என்.அன்பாளன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

128 ஓட்டங்கள் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரீ பிரியரத்தின மத்திய கல்லூரி அணி, 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் வி.மதுரங்க, கே.சம்பத் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 45,38 ஓட்டங்களையும் ஆர்.பேசன் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.

இறுதிப்போட்டியில் விளையாடிய இரு அணிகளும் பிரிவு – 2 அணிகளாக தரமுயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .