2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தாய்லாந்தில் சாதனை படைக்க காத்திருக்கும் ஹரிகிசன்

Kogilavani   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

தாய்லாந்தில் நடைபெறும் உலக பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை கண்டி, திருத்துவக் கல்லூரி மாணவன் கே.சி.ஹரிகிசன் பெற்றுள்ளார்.

கடந்த, 5,6 ஆம் திகதிகளில் கொழும்பு, மொரட்டுவை பாடசாலையில் நடைபெற்ற 6/6 என்ற சதுரங்க போட்டியில் வெற்றுபெற்றதனூடாக தாய்லாந்து செல்லும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர், கடந்த பெப்ரவரி மாதம் சுகதாச விளையாட்டு அரங்கில் சோட்டோகான் கராத்தே நிறுவனம் எட்டாவது தடவையாக நடத்திய கராத்தே போட்டியிலும் பங்கு கொண்டு அகில இலங்கை ரீதியில் தங்கப் பதக்கத்தை பெற்றார். நடப்பு வருடத்தில் இரட்டைச் சாதனைகள் படைத்த இளம் வீரர் ஹரிகிஷன், கல்வியிலும் திறமைமிக்க மாணவராக விளங்கி வருகிறார்.

ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இவர், 'டிப்ளோமா இன் ஐட்டி' பட்டத்தையும் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமது 2 ½   வயதில், சதுரங்க விளையாட்டுப்போட்டிப் பயணத்தை ஆரம்பித்த இவர் பல்வேறு தங்கப் பதக்கங்களுக்கும் வெள்ளிப் பதக்கங்களுக்கும் உரித்துவடையவராவர். தேசிய மட்டத்தில் மட்டுமன்றி உலக ரீதியிலான போட்டிகளிலும் பங்கு கொண்டு அபாரத் திறமைகளை வெளிக் காட்டியுள்ளார்.

இவர் ரஷ்யா, போலந்து, மலேசியா, இந்தியா, டுபாய் போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற் கொணடுள்ளார். தொடர்ச்சியாக தம்மால் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற துடிப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.

இவர் இம்மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள உலகப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிலும் அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசியப் பாடசாலைகளுக்கடையிலான போட்டியிலும் பங்கு கொண்டு தாய் நாட்டுக்குப் பெருமை சேர்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .