2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மடவளை மதீனா மத்திய கல்லூரி செம்பியன்

Kogilavani   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

கண்டி, வத்துகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டியில், மடவளை மதீனா மத்திய கல்லூரி செம்பியனானதுடன் சிறந்த கால்;;பந்தாட்ட வீரனாக மதீனா அணியின் கெப்டன் உசாமா பாசில் தெரிவு செய்யப்பட்டார்.

15 வயதுக்கு கீழப்பட்டவர்களுக்காக இப்போட்டி நிகழ்த்தப்பட்டது.

வலல ஏ.இரத்நாயக்கா மத்திய கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில், மத்தி மாகாண சபை உறுப்பினர்; சட்டத்தரணி சுனில் அமரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து பரிசில்களை வழங்கினார்.

மடவளை மதீனா மத்திய கல்லூரியானது ஏற்கனவே நடந்த போட்டிகளில் இரஜவெல தேசிய கல்ல}ரி, வத்துகாமம் மத்திய கல்லூரி, திகனை அல்-ஹிக்மா வித்தியாலயம் என்பவற்றுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .