2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இந்திய பயணமாகும் கிழக்கு பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணி

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான நட்புறவு கூடைப்பந்தாட்ட போட்டியில் கலந்துகொள்வதற்கென, கிழக்கு பல்கலைகழக கூடைப்பந்தாட்ட அணியினர் நாளை வெள்ளிக்கிழமை (10) இந்தியாவுக்கு பயணமாக இருக்கின்றனர்.

கடந்த காலங்களில் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில் பல்வேறு மட்டங்களில் பல்வேறுபட்ட சாதனைகளையும் பெருமைகளையும் கிழக்கு பல்கலைக்கழகத்துக்காக பெருமை சேர்த்துக் கொடுத்த கூடைப்பந்தாட்ட அணியனரே இம்முறை இந்தியாவுக்கு செல்கின்றது.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை இந்தியாவின் பெங்களூரில்  போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் அதில் கிழக்கு பல்கலைகழகத்தில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகள் கலந்துகொள்வதற்காக இந்தியா பயணமாகவிருப்பதாகவும் கிழக்கு பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளரும் உடற்கல்வி ஆசிரியருமான மு.பரணிதாசன் தெரிவித்தார்.

பெண்கள் அணியின் தலைவி தவராசா மதுஷானி ஆண்கள் அணியின் தலைவர் பிரின்ஸ் தேவசுதன் ஆகியோரின் தலைமையில் இந்திய பயணமாகும் இரு அணிகளும் பலமிக்க அணி என்பதுடன், இந்தியாவில் நடைபெறவிருக்கும் கூடைப்பந்தாட்ட போட்டிக்காக இலங்கையிலிருந்து கிழக்கு பல்கலைக்கழக அணியினர் மாத்திரம் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .