2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஸீப்ரா விளையாட்டுக் கழக வெள்ளிவிழா விளையாட்டுப் போட்டிகள்

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹூஸைன்

மட்டக்களப்பு - தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் மென்பந்து, கரப்பந்து விளையாட்டுப் போட்டிகளை புதன்கிழமை நடாத்தியது.

வருடம்தோறும் நடாத்தப்படும் மென்பந்து சுற்றுப்போட்டியில் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற 24 கழகங்கள் பங்குபற்றின.
இதில் இறுதிச்சுற்றுக்கு ஆரயம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகமும்  மட்டக்களப்பு சஸ்ரைன் விளையாட்டுக் கழகமும் முன்னேறின.

தொடர்ந்து நடாத்தப்பட்ட, இறுதிச் சுற்றில் ஆரயம்பதி ஏசியன் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி முதல் இடத்துக்கு தெரிவாகியது.

கரப்பந்து சுற்றுப்போட்டி பிரசித்தி பெற்ற விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்டது. இதன் இறுதிச்சுற்றில் ஸீப்ரா விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டியது.  

இறுதியாக மென்பந்து, கரப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடத்துக்கு தெரிவாகிய விளையாட்டுக் கழகங்களுக்கு ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தால் நினைவுக் கோப்பையும் பணப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X