Gavitha / 2015 ஏப்ரல் 11 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான 2015ஆம் ஆண்டுக்கான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியின் முதற்கட்ட கால்பந்தாட்டப் போட்டி சனிக்கிழமை (11) நடைபெற்றது.
இதில் லக்கி விளையாட்டுக் கழகத்துக்கும் புளு இலவன் விளையாட்டுக் கழகத்துக்கும் இடையிலான முதற்கட்ட போட்டியில் பெனால்டி உதை மூலம் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் புளு இலவன் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் மிகவும் பலமாக மோதிக்கொண்டது. போட்டியின் முழுமையான நேரம் வரைக்கும் இரண்டு அணிகளும் கோல் போடாததால் பெனால்டி உதை வழங்கப்பட்டது. இதில் புளு இலவன் 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .