2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஓல்ட் கோல்ட் அணி சம்பியன்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். ஹொக்கிச் சங்கத்தால் யாழ். மாவட்ட ஹொக்கி அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஹொக்கிப் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி வட்டுக்கோட்டை ஓல்ட் கோல்ட்ஸ் விளையாட்டுக் கழக அணி சம்பியனாகியது.

இந்தச் சுற்றுப்போட்டியில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஹொக்கி அணிகள் பங்குபற்றியதுடன், போட்டிகள் சென்.ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானங்களில் நடைபெற்றன.

சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்ற இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து வட்டுக்கோட்டை ஒல்ட் கோல்ட் அணி மோதியது.

இரண்டு அணிகளும் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டமையால் முதற்பாதியாட்டம் கோல்கள் பெறாத நிலையில் முடிவடைந்தன.

இரண்டாவது பாதியாட்டத்தில் ஓல்ட் கோல்ட் அணியின் ஆதிக்கம் மைதானத்தில் நிலைபெற அவ்வணியின் என்.பாலு அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பெற்று தமது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இந்த இரண்டு கோல்கள் இறுதிவரையில் நிலைத்திருக்க ஓல்ட்கோல்ட் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வென்று, மாவட்டச் சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .