Princiya Dixci / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான ஐந்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தம்பிலுவில் றேன்சஸ் அணி ஐந்து விக்கெட்டுக்களால் சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.
இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 08 அணிகள் பங்குபற்றியிருந்தன. திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் தம்பிலுவில் றேன்சஸ் அணியினரும் இறுதிப் போட்டியில் மோதினர்.
இறுதி சுற்றுப் போட்டியானது தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் கடந்த சனிக்கிழமை (11) இடம்பெற்றது.
இதில், தம்பிலுவில் றேன்சஸ் அணியினர் ஐந்து விக்கெட்டுக்களால் திருக்கோவில் உதயசூரியன் அணியினரை வெற்றிகொண்டு தம்பிலுவில் றேன்சஸ் அணியினர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் என்.மணிவண்ணன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வி.ஈஸ்வரன், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.ரிஷாந்தன் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் திருமதி எல்.சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
44 minute ago
3 hours ago