2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு கிண்ணியா மாணவி தெரிவு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிக்கு கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.என்.பாத்திமா சமீஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியின் முடிவுகள் வியாழக்கிழமை (16) வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கையிலிருந்து சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 25 மாணவர்கள் கொண்ட  குழுவில் இணைந்து கொள்வதற்கு இவர் தகுதிபெற்றுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து சர்வதேச மட்ட போட்டிக்கு மொத்தம் மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட ஒலிம்பியாட் போட்டியில் ஆகக் கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை இம் மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .