2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புதுவருட கிரிக்கெட் போட்டியில் லக்கி வெற்றி

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

தமிழ், சிங்கள புதுவருடத்தையொட்டி அம்பாறை மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பு ஏற்பாடு செய்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி, வியாழக்கிழமை (16) அக்கரைப்பற்று இராணுவ முகாம் மைதானத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் அன்வர் நௌசாத் தலைமையில் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

இதில் ஆரம்பப் போட்டியில் அட்டாளைச்சேனை லக்கி விளையாட்டுக் கழகமும் அக்கரைப்பற்று ஜீனியஸ் விளையாட்டுக் கழகமும் பங்குபற்றின.

முதலில் துடுப்பெடுத்தாடிய லக்கி அணியினர் 10 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் எம்.நௌசாத் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றி பெறுவதற்கு 71 ஓட்டங்களைப் பெறத்துடுப்பெடுத்தாடிய ஜீனியஸ் அணியினர் 8 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களைப் பெற்றனர். மேலதிக 26 ஓட்டங்களினால் லக்கி அணியினர் வெற்றி பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .