2025 ஜூலை 07, திங்கட்கிழமை

காங்கேசன்துறை ஐக்கியம் சம்பியன்

Kogilavani   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாண மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம், யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையே நடைபெற்ற பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் காங்கேசன்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் 45:27 என்ற புள்ளிகள் அடிப்படையில் பமிலியன்ஸ் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் பமிலியன்ஸ் அணியும் காங்கேசன்துறை ஐக்கிய அணியும் மோதின.

நான்கு சுற்றுக்களாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், காங்கேசன்துறை ஐக்கிய அணி முதல் இரண்டு சுற்றுக்களையும் முறையே 16:09, 11:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வென்றது.

மூன்றாவது சுற்றில் பமிலியன்ஸ் அணி போராடி எதிரணியின் புள்ளிகளை கட்டுப்படுத்திய போதும் தமக்கான புள்ளிகள் பெறுவதில் தளர்வைக் காட்டியது.

ஐக்கிய அணி நான்காவது சுற்றை 8:4 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. கடும் போட்டியின் மத்தியில் இடம்பெற்ற இறுதிச் சுற்றையும் ஐக்கிய அணி 10:8 என்ற புள்ளிகள் அடிப்படையில் தனதாக்கியது.

காங்கேசன்துறை ஐக்கிய அணி 45:27 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .