2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உதயம் அணி சம்பியன்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப்போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

கோளாவில் தியாயப்பார் பாலாத்தை ஞாபகார்த்த மைதானத்தில் நேற்று 17ஆம் திகதி இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 2-0 எனும் அடிப்படையில் கண்ணகி கிராமத்தின் கண்ணகி அணியை உதயம் அணி வெற்றிக்கொண்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் அ.ரிசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட உதவி விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சப்ரி நாசர், கிராம உத்தியோகத்தர்களின் நிருவாக உத்தியோகத்தர் கே.தர்மதாச உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இறுதிப்போட்டியில் தெரிவு செய்யப்பட்ட கழகத்தின் சிறந்த வீரர்கள் அடங்கலாக ஏனைய கழகங்களின் வீரர்களையும் உள்ளடக்கிய சிறந்த அணியானது மாவட்ட மட்டபோட்டியில் கலந்து கொள்ளும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .