2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் 3ஆவது சுற்றுக்கு தெரிவு

Thipaan   / 2015 ஏப்ரல் 19 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் நாடத்தும்  கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின், அக்கரைப்பற்று லீக் கழகங்களுக்கிடையிலான  லீக் போட்டியில், அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் மூன்றாவது சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இறக்காமம் விளையாட்டுக் கழக கால்பந்தாட்ட அணிக்கும் சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழக அணிக்குமிடையிலான போட்டி அட்டாளைச்சேனை அஸ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டநேர முடிவில்  இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தமையால், இரு அணிகளுக்கும் பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன.

போட்டியில் சுப்பர் சொனிக் விளையாட்டுக்கழகம் 3-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்நிகழ்வு, சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எல். அப்துல் பத்தாஹ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல். அப்துல் முனாப், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம். றஸீன், அனைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ், அக்கரைப்பற்று லீக் செயலாளர் எம். பாயிஸ், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சுப்பர் சொனிக் கழகத்தில் திறமையை வெளிக்காட்டி, ஆசிரியர் பயிற்சிக்காக தேசிய கல்விக் கல்லூரிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட கழக உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .