Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்;குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டியில், 37 மொத்தப் புள்ளிகளைப் பெற்று ஏசியன் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினைப் பெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவானது.
மெய்வல்லுநர் போட்டிகளும் பரிசளிப்பு நிகழ்வும் பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் சம்மாந்துறை தாறுஸ் ஸலாம் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி முடிவுகளின்படி, ஏசியன் விளையாட்டுக் கழகம் 37 மொத்தப் புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினைப் பெற்று இவ்வாண்டுக்கான சம்பியனாகவும் றோயல் மெட்ரிக் மற்றும் யுனிட்டி ஆகிய விளையாட்டுக் கழகங்கள் தலா 17 மொத்தப் புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளின் முடிவுகளின்படி றோயல் மெட்ரிக் விளையாட்டுக் கழகம் 95 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தினையும், ஏசியன் விளையாட்டுக் கழகம் 59 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தினையும், சென்னை வாரியஸ் மற்றும் முபோ ஆகிய விளையாட்டுக் கழகங்கள் தலா 37 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
கிரிக்கட் சுற்றுப்போட்டியில் நியூ சன் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும், யுனிட்டி விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.
கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஏசியன் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும், சிமாட் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
எல்லே சுற்றுப்போட்டியில் யுனிட்டி விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும், சென்னல் வொரியஸ் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும் பெற்றுக் கொண்டன.
மேலும் கபடி சுற்றுப்போட்டியில் ஏசியன் விளையாட்டு கழகம் முதலாமிடத்தினையும், சிமாட் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டன.
கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஏசியன் விளையாட்டுக் கழகம் முதலாமிடத்தினையும் றோயல் மெட்ரிக் விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.ஐ அமீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்க வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
1 hours ago