Princiya Dixci / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளத்தில் அமைக்கப்பட்டு வரும் புத்தளம் மாவட்டத்துக்கான தேசிய விளையாட்டு அரங்கின் மிகுதி வேலைகளை பூரணப்படுத்தி மூன்று மாதங்களுக்குள் அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த தேசிய விளையாட்டு அரங்கின் நிர்மாணப்பணிகள் தொடர்பாக புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகள், நகரசபை அதிகாரிகள் மற்றும் நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கிடையில் நகரசபை வெண்பனிமனையில் சனிக்கிழமை (25) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி முப்பது கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கின் நிர்மாணப்பணிகளை இன்னும் மூன்று மாதங்களுக்குள் பூரணப்படுத்திவிட்டு, தேசிய மட்ட போட்டிகளை புத்தளத்திலும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .