2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 26 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட ஏ பிரிவு கால்பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 02ஆம் திகதி மட்டக்களப்பில் ஆரம்பமாகவுள்ளது.
 
'மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணம்' என்ற பெயரில் முதன்முறையாக இந்த சுற்றுப்போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
இதனை அறிமுகம் செய்யும் நிகழ்வு, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை (25) மாலை நடைபெற்றது.
 
இலண்டன் நம்பிக்கை ஒளியின் அனுசரணையுடன் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பு, மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து இந்த சுற்றுப்போட்டியினை நடத்தவிருக்கின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட ஏ பிரிவு அணிகள் பத்து இந்த சுற்றுப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
 
இவர்களுக்கான போட்டிகள் தொடர்பிலான அணிகளும் இதன்போது குலுக்கள் முறையில் தெரிவுசெய்யப்பட்டன.
 
மட்டக்களப்பு மாநகர சபை சவால் கிண்ணத்துக்கான இலட்சினையும் இதன்போது வெளியிட்டுவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளை அமைப்பின் பணிப்பாளர் கே.சிவகரன் உட்பட கால்பந்தாட்ட கழகங்களின் தலைவர்கள், கால்பந்தாட்ட சங்க உறுப்பினர்கள், மாநகர சபை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .