2025 ஜூலை 07, திங்கட்கிழமை

ஆலையடிவேம்பு உதயம் அணி சம்பியன்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 26 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

விளையாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய இவ்வருடத்துக்கான ஆலையடிவேம்பு பிரதேசமட்ட விளையாட்டுப்போட்டிகளுக்கமைய இடம்பெற்ற கால்பந்தாட்டப்போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
 
ஆலையடிவேம்பு பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.ரிஷந்தனின் ஏற்பாட்டில் கோளாவில்-02, அமரர் தியாகப்பன்-பாலாத்தை ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (25) ஆலையடிவேம்பு உதயம் அணியும் கண்ணகிகிராமம் கனகர் அணியும் மோதிக்கொண்டன.
 
இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி விளையாட்டு உத்தியோகஸ்தர் ஏ.சப்றி நசாரும் கலந்து சிறப்பித்தனர்.
 
அறிமுக வைபவங்களைத் தொடர்ந்து ஆரம்பம் முதல் இறுதிவரை மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இடம்பெற்ற இப்போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.
 
போட்டியைத் தொடர்ந்து இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றிய அதிதிகள் இரண்டு அணி வீரர்களது திறமையையும் மைதான ஒழுக்கத்தையும் பாராட்டிப் பேசியதோடு, பிரதேச செயலாளர் உதயம் அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கிவைத்தார்.

இதன்போது கால்பந்தாட்டப் பயிற்சிகளுக்கான அடிப்படை வசதிகள் மிகக்குறைந்த நிலையிலும் தமது அதீத திறமையால் இறுதிப்போட்டிவரை முன்னேறிய கண்ணகி கிராமம் கனகர் அணி வீரர்களைப் பாராட்டியதுடன், அவர்களுக்கான குறிப்பிட்ட சில வசதிகள் விரைவில் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .