2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கால்பந்தாட்ட போட்டியில் சோபர் அணி வெற்றி

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திவிநெகும திணைக்களத்தின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை வாழ்வின் எழுச்சி சமூதாய அடிப்படை வங்கியினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றி பெற்று சம்பியனானது.
 
அட்டாளைச்சேனை அஸ்ரஃப் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(26) இடம்பெற்ற போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணியும், திருக்கோவில் உதய சூரியன் அணியும் மோதின.
 
அம்பாறை மாவட்டதில் மிகவும் பலம் பொருந்திய இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இப்போட்டி ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
 
போட்டி ஆரம்பமாகி 20 நிமிடங்களில் சோபர் அணி, கோல் ஒன்றை போட்டது. இடைவேளைக்குப் பின்னர் உதய சூரியன் மிகவும் ஆக்ரோசத்துடன் விளையாடிய போதும் கோல்கள் போடும் பல சந்தர்ப்பங்களை இழந்தது. இதனால் சோபர் அணியினர் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
 
முகாமையாளர் டி.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் டி.ஜே.அதிசயராஜ், தலைமைப் பீட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .