George / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாண மாவட்ட பளுத்தூக்கல் சங்கம் நடத்திய யாழ். மாவட்ட மட்ட ஆணழகன் போட்டியில், 75 கிலோகிராம் எடைப்பிரிவில் நியூ வேல்ட் உடற்பயிற்சி நிலையம் சார்பில் பங்கேற்ற கணேசமூர்த்தி சங்கர் கணேஸ் யாழ். மாவட்ட ஆணழகன் பட்டதை பெற்றார்.
31 இளைஞர்கள் பங்கேற்ற இப்போட்டி, சனிக்கிழமை (25) மாலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டு, பங்கு பற்றிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஆணழகன் போட்டி யாழ். மாவட்டத்தில் மகப் பிரபல்யமாக இடம்பெற்று வந்தது. பின்னர் போர்;ச்சூழல் காரணமாக இப்போட்டிகள் தடைப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு மீளவும் யாழ். மாவட்டத்தில் உடற்பயிற்சி நிலையங்கள் செயற்பட தொடங்கியபோதும்,; பளுத்தூக்கல் போட்டிகள் மட்டுமே அதிகளவில் இடம்பெற்று வந்தன. உடற்கட்டழகு போட்டிகளுக்கான சரியான தளங்கள் அமையப்பெறவில்லை.
இந்நிலையில், யாழ். மாவட்ட பளுத்தூக்கல் சங்கம் இந்த உடற்கட்டழகு போட்டியினை முதன் முதலில் யாழ். மாவட்ட ரீதியில் ஏற்பாடு செய்தது. இதில் 55 இல் இருந்து 85 கிலோகிராம் வரையான எடைப்பிரிவில் போட்டிகள் இடம்பெற்றன.
இப்போட்டியில் 55 கிலோகிராம் எடைப்பிரிவில் தயாபரநாதன் தயாநிசன், 60 கிலோகிராம் எடைப்பிரிவில் கணகரட்னம் டெனீஸ், 65 கிலோகிராம் எடைப்பிரிவில் பரமேஸ்வரன் சுபீதரன், 70 கிலோகிராம் எடைப்பிரிவில் ஜோன்ஞானேந்திரன் நிவிந்தன், 75 கிலோகிராம் எடைப்பிரிவில் கணேசமூர்த்தி சங்கர் கணேஸ், 80 கிலோகிராம் எடைப்பிரிவில் கந்தையா கமலதாஸ், 85 கிலோகிராம் எடைப்பிரிவில் விஜயபாஸ்கர் விஜயசங்கர் ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.
45 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
8 hours ago