2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உதயம் அணி சம்பியன்

George   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

ஆலையடிவேம்பு பிரதேச மட்ட விளையாட்டுப்போட்டிகளின் ஒரு அங்கமாக நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
 
ஆலையடிவேம்பு பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.ரிஷந்தனின் ஏற்பாட்டில் கோளாவில்-02, அமரர் தியாகப்பன்-பாலாத்தை ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஆலையடிவேம்பு உதயம் அணியும், கண்ணகி கிராமம் கனகர் அணியும் மோதின.
 
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும் சிறப்பு அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.சப்றி நசாரும் கலந்துகொண்டனர்.
 
ஆரம்பம் முதல் இறுதிவரை மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இடம்பெற்ற இப்போட்டியில் ஆலையடிவேம்பு உதயம் அணி 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிக்கிண்ணத்தைச் சுவீகரித்தது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .