2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை சோபர் அணி சம்பியன்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

திவிநெகும திணைக்களத்தின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை வாழ்வின் எழுச்சி சமூதாய அடிப்படை வங்கியினால் நடத்தப்பட்ட கால்பந்தாட்டப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணி வெற்றி பெற்று சம்பியனானது.
 
அட்டாளைச்சேனை அஸ்ரஃப் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற இந்த கால்பந்தாட்டப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் அணியும் திருக்கோவில் உதய சூரியன் அணியும் மோதிக்கொண்டன.
 
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பலம் பொருந்திய இவ்விரு அணிகளுக்குமிடையில் ஆரம்பமான இப்போட்டி, ரசிகர்களின் பலத்த கரகோசத்தின் மத்தியில் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
 
போட்டி ஆரம்பித்து 20 நிமிடங்களில் சோபர் அணி, உதய சூரியன் அணிக்கு ஒரு கோளினைப் போட்டது. இடைவேளைக்குப் பின்னர் உதய சூரியன் மிகவும் ஆக்ரோசத்துடன் விளையாடிய போதும் கோள்கள் போடும் பல சந்தர்ப்பங்களை தவறவிட்டது. இதனால் சோபர் அணியினர் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.
 
முகாமையாளர் ரீ.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், தலைமைப் பீட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.ஹமீட, திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .