Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 30 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொத்துவில் றைஸ்டார் விளையாட்டுக் கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் வொண்டர்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தன்வசமாக்கியது.
16 அணிகள் கலந்துகொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு வொண்டர்ஸ் அணியும் பவர்போயிஸ் அணியும் தெரிவாகியது.
பத்து ஓவர்கள்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி பொத்துவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வொண்டர்ஸ் அணியின் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட கூறியதற்கிணங்க நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களைக் மிக வேகமாகக் குவித்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பவர்போய்ஸ் அணியினர் 08 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.அஜ்மிரும் போட்டியின் தொடர் ஆட்ட நாயகனாக எம்.ஐ.எம். கியாஸூம் தெரிவாகினர்.
நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித் ஆகியோர் கலந்துகொண்டு பரிசல்களை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago