2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நிந்தவூர் அட்வன்சர் அணி சம்பியன்

Gavitha   / 2015 மே 02 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

நிந்தவூர் லகான் விளையாட்டுக்கழகம் நடத்திய அணிக்கு 07 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நிந்தவூர் அட்வன்சர் அணி வெற்றிபெற்றது.

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், நிந்தவூர் அட்வன்சர் மற்றும் லகான் ஆகிய இரண்டு அணிகள் மோதின.

இதில் முதலில் துருப்பெடுத்தாடிய நிந்தவூர் அட்வன்சர் அணி 05 ஓவர்கள் நிறைவடைவில் விக்கெட் இழப்பின்றி 78 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துருப்பெடுத்தாடிய லகான் அணி 05 ஓவர்கள் நிறைவடைவில் 03 விக்கெட் இழப்புக்கு 60 ஓட்டங்களை பெற்று தோல்வியைத் தழுவியது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கோப்பையும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் எஸ் எல். தாஜுதீன், லகான் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் எம்.எம். சாஹிர் அஹமட் மற்றும் பலரும்; கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .