2025 நவம்பர் 19, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

Thipaan   / 2015 மே 02 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அக்கரைப்பற்று பத்ர் விளையாட்டுக் கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பத்ர் நகர் விளையாட்டு மைதான திறந்த வெளியரங்கில் வியாழக்கிழமை (30) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வு பத்ர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.ஏ.றபிக் தலைமையில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஏல்.தவம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான கால் பந்தாட்ட சீருடைகள், கால்பந்து, காலணி போன்ற விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ் ஊடகவியலாளர் ஏ.எல்.றமீஸ் மற்றும் கழக ஆலோசகர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X