2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்

Thipaan   / 2015 மே 03 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் மற்றும் லாகுகல ஆகிய பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இளைஞர் கழகங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (02) நடைபெற்றது.

அம்பாஙை மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யு.எல்.ஏ.மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கௌரவ அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், தயாக கமகே, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா  உட்பட இளைஞர் சம்மேளனத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .