2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு

Thipaan   / 2015 மே 03 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

கோப் (HOPE) கனவு  காண்பிப்பதற்கல்ல வழிகாட்டுவதற்கு என்ற வேலைத் திட்டத்தின் கீழ், இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு  களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையின் அடிப்படையில் இளைஞர் கழக அங்கத்தவர்களின் அபிவிருத்திக்காக பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.

அத்துடன், இளைஞர் அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பான அறிவுறுத்தும் வேலைத்திட்டமும் இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரிவிலிருந்து 26 கழகங்களுக்கும் மண்முனை தென் எருவில் பற்றிலிருந்து 51 கழகங்களுக்கும் போரதீவுப் பற்று பிரிவிலிருந்து 46 கழகங்களுக்குமாக மேற்படி 03 பிரதேச செயலாளர் பிரிகளிலும் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 123 இளைஞர் கழகங்களுக்கு இதன்போது விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஷ்ணபிள்ளை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், ஆகியோர் உட்பட தேசிய இளைஞர்; சேவைகள் மன்றத்தின் இளைஞர சேவை உத்தியோகஸ்தர்கள், இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது இளைஞர்களுக்கு தொழில் வழிகாட்டல், தையல், அலங்காரம், கணினி, உட்பட்ட தொழிற்பயிற்சிகள், இளைஞர் அபிவிருத்தி, போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட 18 கழகங்களுக்கிடையில் அணிக்கு 6 பேரைக் கொண்ட 2 ஓவர்களையுடைய கிரிக்கட் சுற்றுப்போட்டியொன்றும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .