Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 03 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தெல்லிப்பழை மற்றும் காரைநகர் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மானிப்பாய் இந்துக் கல்லூரியில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.
இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட் சம்மேளனத தலைவர் எஸ்.லக்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டார்.
சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 32 கழகங்கள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் 31 கழகங்கள், காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 14 கழகங்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 43 கழகங்கள், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 41 கழங்கங்கள் என மொத்தம் 161 கழங்கங்களுக்கு கால்;பந்துகள், கரப்பந்துகள், வலைப்பந்துகள், மென்பந்து கிரிக்கெட் உபகரணங்களும் மற்றும் கரம்போட் என்பனவும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago