Kogilavani / 2015 மே 03 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு மாந்தை மேற்கு கால்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மடு மாதா சுற்றுபோட்டியில் நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகம் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
இறுதி சுற்றுப்போட்டி பெரிய பண்டிவிரிச்சான் மைதானத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.
இப்போட்டியில், நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகமும் வேட்டயா முறிப்பு வள்ளுவர் கழகமும் மோதிகொண்டன.
நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகம் கழகம் 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்று சுற்றுக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
இந்நிகழ்வில், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் வரப்பிரகாசம், அருட்தந்தை றஜனிக்காந், அருட்சகோதரர் விஐயதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


45 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
8 hours ago