2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி சம்பியன்

Princiya Dixci   / 2015 மே 05 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அம்பாறை மாவட்ட விளையாட்டுப்போட்டியின் ஒரு அங்கமான குழுநிலைப் போட்டிகளின் பெண்களுக்கான எல்லே போட்டிகள், பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் திங்கட்கிழமை (04)  நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் வீ. ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த அணிகள் பங்குபற்றியது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியும் அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியும் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டன.

முதலில் பெட் செய்த அக்கரைப்பற்று அணி ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு பெட் செய்த அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியினர் இரண்டு ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.

வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணி சார்பாக பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகம் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .