2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழகம் சம்பியன்

Princiya Dixci   / 2015 மே 05 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் இவ்வாண்டுக்கான கிரிக்கெட் சம்பியனாக தெரிவாகியுள்ளது.

அக்கரைப்பற்று 2010 வோரியேஸ் மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் இப்பிராந்தியத்திலுள்ள 27 முன்னணிக் கழகங்கள் பங்கு கொண்ட 05 ஓவர்கள் 07 பேர் கலந்துகொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி திங்கட்கிழமை (04) மாலை அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழக அணியினரும் அட்டாளைச்சேனை மாக்ஸ் மேன் விளையாட்டுக் கழக அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நாணயச் சுழச்சியில் வெற்றி பெற்ற மாக்ஸ் மேன் அணியினர் நியூ ஸ்டார் அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடும் படி கூறியதற்கமைவாக 05 ஓவர்கள் நிறைவில் 01 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களை நியூ ஸ்டார் அணியினர் பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாக்ஸ் மேன் அணியினர் 4.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று 05 ஓட்டங்களினால் தோல்வியை தழுவினர்.

அட்டாளைச்சேனை நியூ ஸ்டார் கழக அணியினர் 05 ஓட்டங்களினால் வெற்றி பெற்று 2015ஆம் ஆண்டுக்கான மர்ஹும் எஸ்.சர்ஜுன் அஹமட் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.

2015ஆம் ஆண்டு இப்போட்டியில் நியூ ஸ்டார் அணி சார்பாக சிறந்த பந்து வீச்சாளராகவும் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் என்.எம்.மபா மற்றும் சகல துறை சிறப்பாட்டக்காரராக இவ்வணியைச் சேர்ந்த எம்.எஸ்.ஆரிப் ஆகியோர் தெரிவாகினர்.

இறுதிப் போட்டியின் பரிசளிப்பு விழா அமைப்பின் தலைவர் எப்.பஹாட் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத் தலைவர் அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் மற்றும் மாக்ஸ் மேன் கழக தலைவர் ஏ.சீ.றிசாட் டாக்டர் சமீம் மறுமலர்ச்சி அமைப்பின் தலைவர் ஏ.எல்.றமீஸ் உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .