2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சென்.அன்ரனீஸ் கழகம் வெற்றி

Kogilavani   / 2015 மே 05 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை ஈஸ்டன் ஈகிள்ஸ் விளையாட்டுக்கழக தலைவர் கிண்ணத்துக்கான, அணிக்கு எழுவர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சென்.அன்ரனீஸ் கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
ஏகாம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், 30 அணிகள் பங்கு பற்றின.

இறுதிப்போட்டியில்  திருகோணமலை சென் அன்ரனீஸ் கழகத்தை எதிர்த்து ஜமாலியா பிஸ்ஷர்மன் விளையாட்டுக்கழகம் மோதியது.

இதில் சென்.அன்ரனீஸ் கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாகீர் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.  
வெற்றிபெற்ற கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 25,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .