George / 2015 மே 05 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-நா.நவரத்தினராசா
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவுக்குட்பட்ட, பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் திங்கட்கிழமை (04) நடைபெற்ற இறுதிப்போட்;டியில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து இராமநாதன் மகளிர் கல்லூரி அணி மோதியது.
போட்டி நேரத்தில் இரு அணிகளும் மாறிமாறிப் புள்ளிகள் பெற்றமையால் வெற்றியாளர் யார் என்பது தொடர்பில்இறுதிநேரம் வரையும் காத்திருக்க வேண்டியிருந்தது.
இறுதி நிமிடங்களை தங்கள் வசம் வைத்திருந்த உடுவில் மகளிர் கல்லூரி அணி 27:26 என்ற புள்ளிகள் அடிப்படையில் போராடி வெற்றிபெற்றது.
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago