Thipaan / 2015 மே 06 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சாஹிறா தேசிய பாடசாலை கால்பந்தாட்ட அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (05) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் 15, 17, 19 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணி வீரர்களுக்கான இந்த பயிற்சி முகாமில் வீரர்கள் கட்டம் கட்டமாக கலந்து கொள்ள உள்ளனர்.
சாஹிரா கல்லூரியின் இந்த மூன்று பிரிவு அணிகளும் வடமேல் மாகாணத்தில் நடைபெறவுள்ள போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு இந்த பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயிற்றுவிப்பாளரும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புத்தளம் இளைஞர் அபிவிருத்தி இணைப்பாளருமான எம்.எப்.எம். ஹுமாயூன் தெரிவித்தார்.
உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூனுடன் இணைந்து உடற்கல்வி போதனாசிரியர் ஏ.ரினூஸ் ஆகியோர் இந்த பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

50 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago
8 hours ago