2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Thipaan   / 2015 மே 06 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

கல்முனை, நற்பிட்டிமுனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானம், கல்முனை மாநகர சபையினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்கிழமை (05) நடைபெற்றது.

சுமார் 40 இலட்சம் ரூபாய் நிதியில் இந்த மைதானம்  அமைக்கப்பட்டுவருகிறது.

கல்முனை மாநகர சபை முதல்வர் எம். நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நற்பிட்டிமுனை அபிவிருத்தி குழு, மாநகர பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீட், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம். சாலிதீன், எம்.எச்.எச்.ஏ. நபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதானம், பொதுச் சந்தை அபிவிருத்தி என்பன கலந்துரையாடப்பட்டது.

விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரையான 06 மாத காலங்களுக்குள் அபிவிருத்தி செய்வதாக இணக்கம் காணப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .